இந்தியா – இங்கிலாந்து 3வது டெஸ்ட்: இந்திய அணி வீரர்கள் மாற்றம்!

இந்தியா – இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் ராஜ்கோட்டில் இன்று தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5…

இந்தியா – இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் ராஜ்கோட்டில் இன்று தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  ஐதராபாத்தில் நடந்த தொடக்க டெஸ்டில் 28 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

இதில் தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் 2 போட்டிகளில் விளையாடாத விராட் கோலி இந்த தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.  அதேபோல் முதுகு வலி காயத்தால் அவதிப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரும் எஞ்சிய தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த தொடரில் எஞ்சியுள்ள 3 போட்டிகளுக்கான இந்திய அணி பிப்.10 அன்று அறிவிக்கப்பட்டது.  இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (பிப்.15) தொடங்கியது.  அதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

மேலும், கே.எல்.ராகுல் போட்டியிலிருந்து விலகிய நிலையில்,  அவருக்கு பதிலாக இளம் வீரர் சர்ஃப்ராஸ் கான், ஸ்ரீகர் பரத்துக்கு பதிலாக இளம் வீரர் துருவ் ஜுரெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  தொடர்ந்து அக்ஷர் படேல், முகேஷ் குமாருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.