இந்தியாவில் குறையும் கொரோனா உயிரிழப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 41,806 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், உயிரிழப்பு 581 ஆக குறைந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து 90…

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 41,806 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், உயிரிழப்பு 581 ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து 90 சதவிகிதம் அளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. அதுபோலவே, கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் இதுவரை 3,09,87,880 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 41,806 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

நாடு முழுவதும் தற்போது, 4,32,041 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் , ஒரே நாளில் 39,130 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,01,43,850 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4,11,989 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 581 ஆக குறைந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 34,97,058 தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில் , இதுவரை 39,13,40,491 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 19,43,488 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை நாட்டில், 43,80,11,958 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது எனவும் சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.