இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,727 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தற்போது படிப்படியாக குறைந்து ஒரே அளவில் நீடித்து வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது 3வது அலை வந்தால் அதனை எதிர்கொள்வதற்கான பணிகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,727 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,37,66,707 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 277 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,48,339 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 28,246 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நலம்பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 3,30,43,144 ஆக உள்ளது. தற்போது கொரோனாவுக்கு 2,75,224 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 64,40,451 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை 89,02,08,007 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.








