கோட்சேவை பாஜக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது: அண்ணாமலை

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை ஒருபோதும் பாஜக ஏற்றுக்கொள்ளாது என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சாவர்க்கர் குறித்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில்…

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை ஒருபோதும் பாஜக ஏற்றுக்கொள்ளாது என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சாவர்க்கர் குறித்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “சாவர்க்கர்: எ கான்ஸ்டண்ட் லெகசி” நூலினை வெளியிட எழுத்தாளர் விக்ரம் சம்பத் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  “ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டவர் என சாவர்க்கர் அடையாளம் காட்டப்படுகிறார். ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டது உண்மைதான். ஆனால் அது அரசியல் ரீதியிலானது, அரசியல் தந்திரம். காந்தியின் கொலைக்கும் சாவர்க்கருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சாவர்க்கர் காந்தியின் கொலையோடு சம்பந்தப்படுத்தபட்டுள்ளார்” என்று கூறினார்.

ஹிந்து மகாசபையில் இருந்ததால் கோட்சேவை பாஜக ஆதரிக்கும் என கருதக்கூடாது என தெரிவித்த அண்ணாமலை, காந்தியின் மரணத்திற்கு காரணமான கோட்சேவை ஒருபோதும் பாஜக ஏற்றுக் கொள்ளாது என்றார். மேலும், ஹெச்.ராஜா அற்புதமான மனிதர், அவர் பேசியதற்கு அவரே விளக்கம் கொடுத்துள்ளார். பத்திரிகையாளர்களை மதிக்கக்கூடிய கட்சி பாஜக. இத்தோடு ஹெச்.ராஜா சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.