கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க இதுவரை நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி 26 கோடியே 19 லட்சத்து 72 ஆயிரத்து 014 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள இந்திய கொரோனா நிலவர அறிக்கையில், “கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,542 பேர் எனவும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,79,573- ஆக உள்ளது.
கொரோனாவில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 1,07,628 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2கோடியே 83 லட்சத்து 88 ஆயிரத்து 100 -ஆக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,65,432-ஆக உள்ளது.
மேலும் நாட்டில் தொடர்ந்து 34வது நாளாக குணமடைவோரின் எண்ணிக்கை தினசரி பாதிப்பு எண்ணிக்கையை விட அதிகமாக இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 28 லட்சத்து 458 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 26 கோடியே 19 லட்சத்து 72 ஆயிரத்து 014 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 19,30,987 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 38,33,06,971 பேருக்கு கொரோனா பரிசோதனைகள்: மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 224-ஆக உள்ளது. நாட்டின் மொத்த கொரோனா 2 கோடியே 96 லட்சத்து 33 ஆயிரத்து 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.







