இந்தியா-சீனா எல்லை பிரச்னையின் போது சீன அதிகாரிகளுடன் ராகுல் காந்தி என்ன செய்து செய்து கொண்டிருந்தார் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா-சீனா எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன வீரர்களுன் சண்டையிட்ட இந்திய ராணுவ வீரர்கள் குறித்து ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ” சீன ராணுவ வீரர்களுடன் நமது துணிச்சலான வீரர்கள் மோதலில் ஈடுபட்டிருந்த போது, நீங்கள் சீன அதிகாரிகளுடன் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று பதில் சொல்லுங்கள். ராகுல் காந்தி ஏன் அமைதியாக இருக்கிறார்? ராகுல் காந்தி ஏன் நமது ராணுவத்தை மட்டுமே கேள்வி கேட்கிறார்,” என்று அவர் கேள்வியெழுப்பினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் பிரதமர் மோடி குறித்து தாக்கி பேசிய பாகிஸ்தான் அமைச்சருக்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், “பயங்கரவாதத்திற்கு எதிராக உலகை இந்தியா ஒன்றிணைத்து வரும் நிலையில், நமது அண்டை நாடுகள் சில பயங்கரவாதத்தை ஆதரித்து, அதற்கு ஆதரவாக உரத்த குரலில் பேசுகின்றன. அவர்களின் உண்மை முகம் சர்வதேச அளவில் வெளிப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் பயங்கரவாதத்தை எதிர்க்க மத்திய அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பயங்கரவாதத்தை அழிக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. யுஏபிஏவை வலுப்படுத்துவது பற்றியோ அல்லது என்ஐஏவை கூட்டாட்சி அமைப்பாக மாற்றுவது பற்றியோ எங்களிடம் சகிப்புத்தன்மை இல்லாத கொள்கை உள்ளது என்று கூறினார்.
தொடாந்து பேசிய அவர், “மோடி அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக கடைபிடிக்கும் அணுகுமுறைகளும், தீர்க்கமான நடவடிக்கைகளும் உறுதியான முடிவுகளைத் தந்துள்ளது. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மற்றும் பாலகோட் தாக்குதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம், 2014 முதல் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் 168% குறைந்துள்ளது” என்று கூறினார்.
“சமூக நலன் என்ற பெயரில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும்” ஒரு அமைப்பை (PFI) தடை செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் தயங்கவில்லை. இந்த அமைப்புக்கு எதிராக முழுமையான விசாரணை நடத்தி அதன் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இனிமேலும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்” என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.