கர்நாடகாவில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை உடனடியாக எரியூட்ட, 25 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2-வது அலை, தீவிரமாக பரவிவரும் நிலையில், கர்நாடகாவில் நாள்தோறும் சுமார் 20 ஆயிரம் பேர், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல், கொரோனா உயிரிழப்புகளும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பெங்களூருவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரியூட்ட, மின் மயானத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
அதிக உடல்கள் எரியூட்டப்படுவதால், டோக்கன் வாங்கிக் கொண்டு இறந்தவர்களின் உறவினர்கள், நீண்ட நேரம் காத்திருந்து உடல்களை எரியூட்டி வருகின்றனர்.
அதேநேரத்தில், உடல்களை உடனடியாக எரியூட்ட 25 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாக, உறவினர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.







