இந்தியா, ஆஸ்திரேலியா உடனான உறவு குவாட் உச்சி மாநாட்டிலும் தொடரும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் 4வது குவாட் உச்சி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பேசிய அவர் அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய, ஆஸ்திரேலியா இடையேயான உறவு மிகச்சிறப்பாக இருப்பதாகவும், அது குவாட் உச்சி மாநாட்டிலும் தொடரும் என தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: திமுகவின் நல்லாட்சி தொடர மக்கள் ஆதரவு கிடைக்கும்: திமுக எம்.பி கனிமொழி நம்பிக்கை
இதனை தொடரந்து பேசிய ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி, ஜப்பானில் குவாட் உச்சி மாநாட்டை நடத்த விருப்பம் தெரிவித்தார். பிறகு, நாட்டு மக்களின் நன்மைக்காக நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து திறம்பட செயல்படுகிறோம் என்பதை குவாட் மாநாடு மூலம் நிரூபிக்க முடியும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் குறிப்பிட்டார்.
இதனை அடுத்து பேசிய ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மரிஸ் பெய்ன், தொழில்நுட்ப சிக்கல்கள், தீவிரவாத எதிர்ப்பு, காலநிலை மற்றும் தடுப்பூசி விநியோகம் ஆகியவற்றில் ஒன்றிணைந்து செயல்படவும், கடல்சார் பாதுகாப்பு குறித்து விவாதிக்கவும் மாநாட்டில் நிறைய வாய்ப்புள்ளதாக கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








