இந்தியாவில் புதிதாக 58,077 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

இந்தியாவில் புதிதாக 58,077 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 6,97,802 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,…

இந்தியாவில் புதிதாக 58,077 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 6,97,802 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக 58,077 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 657 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், அதே நேரத்தில், 1,50,407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 171 கோடியே 79 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அண்மைச் செய்தி: திமுகவின் நல்லாட்சி தொடர மக்கள் ஆதரவு கிடைக்கும்: திமுக எம்.பி கனிமொழி நம்பிக்கை.

இந்தியாவில் நேற்று 67,084 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று புதிதாக 58,077 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 10,000 பேர் அளவுக்கு தொற்று பாதிப்பு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.