மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை பள்ளிகளுக்கு அணிந்து வரக்கூடாது என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவுறுத்தியுள்ளார்.
கர்நாடகாவில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஹிஜாப் அணிய தடை விதிக்கக் கோரி சில அமைப்பினர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட நிலையில், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஹிஜாப் வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை அணிய தடை விதித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
இந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை அணிந்து வரக்கூடாது என மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். வரும் திங்கட்கிழமை முதல் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கவுள்ள நிலையில் பசவராஜ் பொம்மை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், “ஹிஜாப் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உரிய நேரத்தில் தலையிடும்; இந்த விவகாரத்தை தேசிய பிரச்னையாக்க வேண்டாம்” என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








