மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய டி20 அணி அறிவிக்கப்படுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி ஆகஸ்ட் 3ஆம் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐயின் புதிய தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியில், இஷான் கிஷன், ஷுப்மான் கில், சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன், அக்சர் படேல், சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முதல்முறையாக ஜெய்ஸ்வால், திலக்வர்மா, முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
முதல் போட்டி : ஆகஸ்ட் 3, பிரையன் லாரா மைதானம், டிரினிடாட்
2- வது போட்டி: ஆகஸ்ட் 6, பிராவிடன்ஸ் மைதானம், கயானா
3 – வது போட்டி: ஆகஸ்ட் 8, பிராவிடன்ஸ் மைதானம், கயானா
4 – வது போட்டி: ஆகஸ்ட் 12, சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் மைதானம், லாடர்ஹில், புளோரிடா
5- வதுபோட்டி : ஆகஸ்ட் 13, சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் மைதானம், லாடர்ஹில், புளோரிடா





