மேகதாதுவில் அணை ஒருபோதும் கட்ட அனுமதிக்க மாட்டோம்: அமைச்சர் துரைமுருகன் உறுதி!

பேச்சுவார்த்தை நடத்தினாலும் சரி மேகதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.   டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அமைச்சர் துரைமுருகன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். “ஒரு நாளைக்கு ஒரு…

பேச்சுவார்த்தை நடத்தினாலும் சரி மேகதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அமைச்சர் துரைமுருகன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
“ஒரு நாளைக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் வரவேண்டும். மூன்றாம் தேதி வரை  12 புள்ளி 213 டி எம்சி தண்ணீர் கிடைத்திருக்க வேண்டும். ஆனால்  இரண்டு புள்ளி 993 டிஎன்சி தண்ணீர் தான் கொடுத்துள்ளனர்.  ஒன்பது புள்ளி 220 டி எம் சி தண்ணீர் நிலுவையில் உள்ளது. இந்த நிலை நீடித்தால் விவசாயம் பாதிக்கும். டெல்டா மாவட்ட பயிர்களை காப்பாற்ற
வேண்டும் என்றால்  கர்நாடக உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும். எனவே காவிரி நீர் மேலாண்மை வாரியம் கர்நாடகா அரசுக்கு ஆணையிட வேண்டும்.
இதுகுறித்து ஜல் சக்தி அமைச்சரிடம் பேசியுள்ளேன்.  இது சாதாரண விஷயம் இல்லை, உயிர் பிரச்சினை என்று அமைச்சரிடம்  தெரிவித்தேன். உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை தராமல் இருப்பது சட்டப்படி குற்றம் என்று கூறியுள்ளேன்.
மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழகத்துடன்  பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று டி கே சிவக்குமார் கூறியுள்ளார என்ற கேள்விக்கு
பேச்சுவார்த்தை நடத்தினாலும் சரி, எழுத்து மூலமாக தெரிவித்தாலும் சரி
மேகதாது அணை கட்ட ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம்”  என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.