நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: இந்தியா கூட்டணி நாளை முக்கிய ஆலோசனை!

இந்தியா கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் நாளை அவசர ஆலோசனை கூட்டம் நடத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே திட்டமிட்டுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…

இந்தியா கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் நாளை அவசர ஆலோசனை கூட்டம் நடத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே திட்டமிட்டுள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், வரும் 18ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கூட்டத்தொடருக்கான தெளிவான காரணம் இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் நாளை அவசர ஆலோசனை கூட்டம் நடத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே திட்டமிட்டுள்ளார். டெல்லியில் 5-ம் தேதி இரவு 8 மணிக்கு கார்கே வீட்டில் அவரச கூட்டம் நடைபெறும் என்றும், அவசர கூட்டத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பேச வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மழைக்கால கூட்டத்தொடரின் போது, மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி கேட்டு எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கின. இந்நிலையில் தற்போது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் மல்லிகார்ஜூன கார்கே ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் முக்கிய பேசுபொருளாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனிடையே மல்லிகார்ஜுன கார்கேவை அவரின் இல்லத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சந்தித்து கட்சி விவகாரங்கள், நடப்பு அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.