டெல்லியில் இன்று ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனை கூட்டம்!

இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் இன்று மதியம் 12 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது.

டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 23 கட்​சிகள் பங்​கேற்​கின்​றன. இக்​கூட்​டத்​தில் பங்​கேற்​கப் போவ​தில்லை என்று திமுக ஏற்​கெனவே அறி​வித்​துள்ள நிலை​யில், ஆம் ஆத்​மி​யும் பங்​கேற்​க​வில்​லை. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தங்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) காங்கிரஸ் கைகோர்த்ததாக கூறி, திமுக தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. காங்கிரஸின் நடவடிக்கையால் திமுக தொண்டர்கள் காயமடைந்துள்ளதால் டெல்லி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என திமுக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் கேரளா தேர்தல் பிரச்சாரத்தின் போது, சிபிஎம் கட்சி பாஜகவுடன் ரகசிய உடன்பாடு வைத்துள்ளதாகக் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, கார்கேவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இருப்பினும், கூட்டணியின் ஒற்றுமைக்காக சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் தரப்பு நியாயத்தை முன்வைப்பார் எனத் தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.