“சுதந்திரம் வெறும் வார்த்தை அல்ல, மிகப்பெரிய பாதுகாப்புக் கவசம்” – #RahulGandhi வாழ்த்து!

சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 78வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர…

#IndependenceDay | "Freedom is not just a word, it is the greatest shield" - Rahul Gandhi

சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

78வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் டெல்லி செங்கோட்டைக்கு வருகை புரிந்தார். அவரை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். தொடர்ந்து 11வது முறையாக பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார்.

இந்த விழாவில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ராகுல் காந்தி கலந்து கொண்டார். முன்னதாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். சுதந்திரம் என்பது நமக்கு வெறும் வார்த்தை அல்ல, மிகப்பெரிய பாதுகாப்புக் கவசமாகும்.

இது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. உண்மை பேசும் திறன், கனவுகளை நிறைவேற்றும் நம்பிக்கை தான் சுதந்திரம், ஜெய் ஹிந்த்” என தெரிவித்திருந்தார். தொடர்ந்து, செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வில் பங்கேற்ற பின், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்விலும் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.