வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 266 ரன்கள் இலக்கு..

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 266 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இன்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல்…

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 266 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இன்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் இரு போட்டிகளில் இந்திய அணி பெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 3வது போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதைத்தொடர்ந்து அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை அளிப்பார்கள் என எதிர்ப்பார்த்த நிலையில் இருவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். விராட் கோலி ட்க் அவுட் ஆக அவரை தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் மற்றும் ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினர். இந்த இணையை பிரிக்க  முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் திணறி வந்த நிலையில் பண்ட் 56 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற அடுத்த வந்த வீரர்கள் 6 ரன்னில் அவுட்டானார்.

பின்னர் வந்த வாஷிங்க்டன் சுந்தர் 33 ரன்னிலும், தீபக் சாஹர் 38 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்கள் சேர்த்தது. அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் 80 ரன்களும், ரிஷப் பண்ட் 56 ரன்களும் சேர்த்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.