அண்ணா பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக முறைகேடுகள் தொடர்பாக நீதிபதி கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்திற்கு எதிராக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்க தொடர்ந்தார்.இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி வி.பார்த்திபன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது அரசு தரப்பில், விசாரணை குழுவின் அறிக்கையை பல்கலைக்கழக வேந்தரான ஆளுநருக்கு அனுப்பி உள்ளதாகவும், மனுதரருக்கு தர இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டது.மேலும், அரசின் அறிவுரைப்படி 3 மாதங்களில் வேந்தர் முடிவெடுக்கு வேண்டும் எனவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து, மனுதாரர் தரப்பில், பல்கலைக்கழக வேந்தருக்கு தெரியாமல் விசாரணை குழு அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, கலையரசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வேந்தருக்கு அனுப்பும் முன் அதனை சூரப்பாவுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.








