IND vs SA: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி | இந்தியா அணி அசத்தல் வெற்றி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.   தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20 மற்றும் 3 ஒரு நாள்…

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.  

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. கடந்த 10 டிசம்பர் முதல் டி20 தொடர் நடைபெற்று வந்த நிலையில், முதல் ஆட்டம் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது போட்டியில் டி.எல்.எஸ் முறையில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி அடைந்தது.

டி20 நேற்று மூன்றாவது போட்டி நடைபெற்ற நிலையில், இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தால் வெற்றிக் கொண்டாட்டத்தில் இந்தியா திளைத்தது. மேலும், தென்னாபிரிக்காவில் நடைபெற்ற இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 (India Vs South Africa T20i Series) தொடரில், இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளியை பெற்று சமநிலையில் ஆட்டத்தை முடித்துக் கொண்டன. முதலில் டாஸை வென்ற தென்னாபிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது.

இதையடுத்து, களத்தில் இறங்கிய இந்திய அணியின் சார்பில் விளையாடிய ஜெய்ஸ்வால் 41 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். சூரியகுமார் யாதவ் 56 பந்துகளில் 100 ரன்கள் அடித்திருந்தார், 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழந்த இந்திய அணி 201 ரன்கள் குவித்து சாதனை செய்தது. மறுமுனையில் 202 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 13.5 ஓவரிலேயே அடுத்தடுத்து தனது அனைத்து விக்கெட்டையும் இழந்து இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்தது.

தென் ஆப்பிரிக்காவின் சார்பில் விளையாடிய எய்டன் 14 பந்துகளில் 25 ரன்னும், டேவிட் மில்லர் 25 பகுதிகளில் 35 ரன்னும், பெராரியா 11 பந்துகளில் 12 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். பிற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தென்னாபிரிக்க அணியினர் திணறியதால் 13 ஓவரில் ஆட்டம் முடிந்தது. மொத்தமாகவே தென்னாபிரிக்க அணி நேற்று 95 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது.  இதனால் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.