முக்கியச் செய்திகள் விளையாட்டு

இந்தியா- தென்ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது.
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டியானது செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இன்று நடக்க உள்ளது. இதையொட்டி இரு அணி வீரர்களும் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். உலகம் முழுவதும் தற்போது ஒமைக்ரான் அச்சுறுத்தி வருவதால் ரசிகர்கள் இன்றி கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த போட்டி நடக்க உள்ளது.
இந்திய அணியில் பல பிரச்னைகள் நிலவி வருகின்றன. விராட் கோலி ஒருநாள் போட்டி கேப்டனில் இருந்து நீக்கப்பட்டது முதல், கங்குலி, விராட் கோலி இருவரும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது தொடர்பான விஷயத்தில் மாறுபட்ட கருத்து தெரிவித்தது போன்ற பிரச்னைகள் நிலவி வருகிறது. இந்த நிலையில், கோலி தலைமையில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக களமிறங்க உள்ளது. இதில், விராட் கோலி தனக்கு எதிராக வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளிப்பார் என அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்துள்ளனர்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே அல்லது ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், அஸ்வின், ஷர்துல் தாக்குர், பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் அல்லது இஷாந்த் ஷர்மா.
தென்ஆப்பிரிக்கா: டீன் எல்கர் (கேப்டன்), மார்க்ராம், கீகன் பீட்டர்சன், வான்டெர் துஸ்சென், பவுமா, குயின்டான் டி காக், வியான் முல்டர், கேஷவ் மகராஜ், ரபடா, நிகிடி, டுவான் ஒலிவியர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram