தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கி இருந்த இப்படத்தில் எச்.ஜே. சூர்யா வில்லனாக நடித்திருந்தார். கதநாயகிகளாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனேன் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் வடிவேலு, கோவை சரளா, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தேனான்டால் ஸ்டுடியோ லிமிடெட் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு ருபன் படத்தொகுப்பாளராக பணியாற்றினார். 2017 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இப்படம் சுமார் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரும் வெற்றியை பதிவு செய்தது.
இந்த நிலையில் முதலமைச்சர் விஜயின் பிறந்த நாளையொட்டி மெர்சல் திரைப்படம் ஜூன் 19 ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.





