முக்கியச் செய்திகள் தமிழகம்

சசிகலாவை வரவேற்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் திடீரென தீ விபத்து!

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்து விடுதலையாகி சென்னைக்கு திரும்பும் சசிகலாவை பெங்களூரூவிலிருந்து வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் வரவேற்பின் போது தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு தேவனஹள்ளி விடுதியில் இன்று காலை 7.15 மணிக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்திய சசிகலா, பின்னர் தமிழகம் கிளம்பினார். இந்நிலையில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே சசிகலாவை வரவேற்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் திடீரென தீப்பற்றியுள்ளது. தீப்பற்றிய கார்களை அணைக்கும் தீயணைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. வரவேற்பின்போது பட்டாசு வெடித்தலில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகின்றது.

முன்னதாக சசிகலா பயணிக்கும் காரில் இருந்து அதிமுக கொடியை அகற்றக்கோரி அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனிடம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையினர் நோட்டீஸ் வழங்கினர். தமிழக – கர்நாடக எல்லையில் தனது காரில் இருந்து இறங்கிய சசிகலா, அதிமுக உறுப்பினர் அட்டை வைத்துள்ள நிர்வாகிக்கு சொந்தமான வேறொரு காரில் பயணித்தார். அதில், அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “சசிகலாவின் காரில் பொருத்தப்பட்டுள்ள கொடியை அகற்ற போலீஸ் தரப்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனிடம் நோட்டீஸ் தரப்பட்டது. ஆனால், நோட்டீஸ் தருவதற்கு காவல்துறைக்கு அதிகாரம் இல்லை.” என்று தெரிவித்தார். மேலும், காவல்துறை பதில் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதாகக் கூறிய தினகரன், காரில் சிறு கோளாறு ஏற்பட்டதால் தான் சசிகலா தனது காரை மாற்றினார். உடனடியாக வேறு கார் இல்லாததால், அதிமுக ஒன்றியச் செயலாளரின் காரில் சசிகலா பயணிக்கிறார் என்றும் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

லஞ்சம் பெற்றதாக சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையின் முன்னாள் முதன்மை பொறியாளர் கைது

Vandhana

சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த மகன்!

Saravana

மமதாவுக்கு ரூ.5 லட்சம் அபராதம்

Halley karthi

Leave a Reply