உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியாவுடன் ஆஸி. அணி ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அட்டவணையை, ஐசிசி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இதுவரையில் இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து தான் உலகக் கோப்பை தொடரை நடத்தியுள்ளது. ஆனால் முதல் முறையாக இந்தியா தனியாக உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது.
தொடக்க போட்டியில் அக்டோபர் 5-ம் தேதி, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது. அதே போல போட்டியை நடத்தும் இந்தியா, அக்டோபர் 8-ம் தேதி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.இந்நிலையில் உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியாவுடன் ஆஸி. அணி ஒருநாள் தொடரில் மோதுகிறது. இதில் முக்கியமான வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளார்கள். காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரில் முக்கிய வீரர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செப்.22, 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் 2 ஒரு நாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்குப் பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாகியுள்ளார்.
மேலும், ருதுராஜ் கெய்க்வாட், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்ற வீரர்கள் ஏற்கனவே ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றவர்கள் தான். ஆனால், கடைசி ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
Coming 🆙 next 👉 #INDvAUS
Here are the #TeamIndia squads for the IDFC First Bank three-match ODI series against Australia 🙌 pic.twitter.com/Jl7bLEz2tK
— BCCI (@BCCI) September 18, 2023
முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான இந்திய வீரர்கள்:
கே.எல்.ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷான், ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா.
3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டிக்கான இந்திய வீரர்கள்:
ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்
உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக இந்தியா, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையில் வார்ம் அப் போட்டிகளில் விளையாடுகிறது. அதன் பிறகு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.