28.9 C
Chennai
September 27, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

ரீ- ரிலிஸாகும் நாயகன் திரைப்படம் – கமல்ஹாசன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து..!

கமல்ஹாசன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக  நாயகன் திரைப்படம் ரீ- ரிலிஸாகிறது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 1987-ம் ஆண்டு வெளியான திரைப்படம் நாயகன். இப்படத்தை முக்தா சீனிவாசன் தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.கமல் நடிப்பில் வெளியாக ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘நாயகன்’ திரைப்படம் அவரது பிறந்த நாளையொட்டி வரும் நவம்பர் 3-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சரண்யா, ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி, கார்த்திகா, விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படத்தை முகுந்தன் ஸ்ரீனிவாசன் தயாரித்திருந்தார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு மேற்கொண்டிருந்தார். லெனின், வி.டி.விஜயன் இருவரும் படத்தொகுப்பு செய்திருந்தனர்.

மும்பையை பின்னணியாக கொண்ட படத்தில் வேலு நாயக்கர் கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை கமல் வெளிப்படுத்தியிருந்தார். இந்தப்படத்துக்காக கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. ஒளிப்பதிவாளர் பிசிஸ்ரீராம், கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு தேசிய விருது கிடைத்தது.

60-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவில் நாயகன் திரைப்படம் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிலையில் கமல்ஹாசன் பிறந்த நாளையொட்டி ‘நாயகன்’ படம் நவம்பர் 3-ம் தேதி
ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

மதுரை மருத்துவ கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை!

Niruban Chakkaaravarthi

60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

Web Editor

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த நைஜீரியர்கள் கைது!

Web Editor