”எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது விவாதத்திற்கு உரியது” – கே.பாலகிருஷ்ணன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது விவாதத்திற்கு உரியது, அதை தனி நபர் முடிவு செய்யமுடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். புதிய நாடாளுமன்ற…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது விவாதத்திற்கு உரியது, அதை தனி நபர் முடிவு செய்யமுடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நியூஸ் 7 தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியதாவது:

”பிரதமர் மோடியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 40 நிமிடங்கள் நீடித்த பிரதமரின் உரையில், ஒரு இடத்தில் கூட சட்டமேதை அம்பேத்கர் பெயர் குறிப்பிடப்படவில்லை. நாடாளுமன்றத்தில் அம்பேத்கரின் பெயரையே சொல்லாமல் பேசுகிறார் என்றால், அரசியல் சாசனத்தை பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் பொருள்.

இதேபோல், பிரதமர் பேசி முடிக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்க போவதாக தெரிவித்துள்ளார். இது ஒரு புறம் நியாயமாக தான் உள்ளது. நாட்டின் மக்கள்தொகை அதிகரித்து வருவதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பது நியாயம் தான். ஆனால் அதே நேரத்தில் இது விவாதத்திற்கு உரியது.

இது ஒரு தேசிய பிரச்னை என்பதால் அனைவரையும் அழைத்து பேச வேண்டும். தனி நபர் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைவரும் விவாதித்து இதை முடிவு செய்ய வேண்டும். அதே நேரத்தில் கங்கையை ஒட்டி உள்ள மாநிலங்களில் அதிக அளவில் மக்கள் இருப்பதால், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வர வாய்ப்பு உள்ளது. மக்கள் தொகை குறைவாக உள்ள தென் மாநிலங்களில், 17 உறுப்பினர்கள் குறைய வாய்ப்பு உள்ளது.”

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.