கேரளாவில் ஒரு வயது குழந்தையை தெருநாய் கடித்து இழுத்துச் சென்ற சிசிடிவி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் சமீப காலமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் சிறுவர்களை தெருநாய்கள் கடித்துக் குதறும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. அந்த வகையில் கேரள மாநிலம் கண்ணூரில் வீட்டின் பின்புறம் குளிக்க அமர்ந்திருந்த ஒரு வயது குழந்தையை தெருநாய் கடித்து இழுத்து சென்றது. சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளே இருந்துஓடிவந்த தாய், தெருநாயிடமிருந்து குழந்தையை மீட்டு தூக்கிச் சென்றார்.
இதேபோல கொல்லம் மாவட்டத்தின் போலயம் என்ற இடத்தில் தெருவில் நடந்து சென்ற லக்ஷன் என்ற பத்து வயது சிறுவனை மூன்று தெருநாய்கள் துரத்திக் கடித்தன. அப்போது அவ்வழியாக ஸ்கூட்டரில் வந்த ஒருவர் சிறுவனை தெருநாய்களிடமிருந்து மீட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இந்த சிசிடிவி காட்சியும் வெளியாகி அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.
கொல்லம் மாவட்டத்தின் மற்றோர் இடத்தில் தெருநாய்கள் கடித்ததில் பத்தாம் வகுப்பு மாணவன் காயமடைந்தான். தெருநாய்களின் தொல்லையால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள், இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








