முக்கியச் செய்திகள் இந்தியா

ரிஷி சுனக்கை இன்று தொடர்பு கொண்டு பேசியதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி டிவீட்

இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனக்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொள்ள முடியாமல் லிஸ் டிரஸ் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்களின் பலத்த ஆதரவுடன் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இங்கிலாந்தில் முதன்முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரதமராகி இருப்பது, இங்கிலாந்தின் இளம் பிரதமர் உள்ளிட்ட பெருமைகளை சுனக் பெற்றுள்ளார். இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், அரசர் மூன்றாம் சார்லசை சந்தித்து பேசினார். இதன்பின்பு, அரசர் 3-ம் சார்லஸ், முறைப்படி புதிய பிரதமராக ரிஷி சுனக்கை அறிவித்தார்.

 

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ரிஷி சுனக்கை இன்று தொடர்பு கொண்டு பேசியதில் மகிழ்ச்சி. இங்கிலாந்து பிரதமராக பதவியேற்று கொண்ட அவருக்கு வாழ்த்து கூறினேன். நம்முடைய விரிவான செயலாக்கத்திற்கான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவற்காக நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். ஒரு விரிவான மற்றும் சமநிலையிலான சுதந்திர வர்த்தக பேரம் விரைவாக முடிவுக்கு வருவது அவசியம் என இருவரும் ஒப்பு கொண்டோம் என தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடியின் வாழ்த்திற்கு ரிஷி சுனக் நன்றி தெரிவித்து டிவிட் செய்துள்ளார். அதில், எனது புதிய பணியை நான் தொடங்கிய தருணத்தில் கனிவான வார்த்தைகளை கூறியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இங்கிலாந்து மற்றும் இந்தியா பல விசயங்களை பரிமாறி கொண்டுள்ளது. வரவுள்ள மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, ராணுவம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் இரு பெரும் ஜனநாயக நாடுகள் என்ன சாதிக்க முடியும் என்பது பற்றி அறிவதில் நான் உற்சாகமுடன் உள்ளேன் என டிவிட்டரில் சுனக் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“TMC MLAக்கள் 38 பேர் பாஜகவுடன் தொடர்பில் இருக்கிறார்கள்”

Mohan Dass

நெல் கொள்முதலில் தளர்வுகள் அறிவித்த மத்திய அரசு – நியூஸ் 7 தமிழுக்கு நன்றி தெரிவித்த பிஆர்.பாண்டியன்

Web Editor

ஏற்காட்டில் கோடை விழா: சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு – அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

Halley Karthik