மலையாள நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் உருவான ’மாலிக்’ திரைப்படம் ஜூலை 15 ஆம் தேதி வெளியாக உள்ளது.
மலையாள திரைப்படமான ’மாலிக்’ திரைப்படத்தில் ஃபகத் பாசில் நடிக்கிறார். இத்திரைப்படத்தை மகேஷ் நாராயன் இயக்க, ஆண்டோ ஜோசப் தயாரிக்கிறார். மலையாளத்தில் சிறந்த கதாநாயகியாக வலம் வரும் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ட்ரெயிலர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. சுளைமான் மாலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர். இஸ்லாமிய சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நபராக இப்பதாக ட்ரெயிலரில் சொல்லப்படுகிறது. இது ஒரு தெளிவான அரசியல் படம் என்று இயக்குநர் முன்பே கூறியிருப்பது குறிப்பிடதக்கது. மேலும் ’தீ கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தில் அசத்தலான நடிப்பை வெளிகாட்டியிருந்த நடிகை நிமிஷா சஜயன் இத்திரைப்படத்தின் நடிக்கிறார். மேலும் இத்திரைப்படம் வரும் ஜீலை 15 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.







