தேனி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, கரையோரப் பகுதி பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரத்தில் அமைந்துள்ளது வைகை அணை. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், வைகை அணை பிற்பகல் 11:30 மணி அளவில் முழு கொள்ளளவான 70 அடியை எட்டியது. அதன் காரணமாக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 4,006 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
எனவே, வைகை ஆற்றின் கரையோரம் உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா







