சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு கிக் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு பெங்களூர் முதல் பாங்காக் வரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சந்தானம் சின்னத்திரையில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி பின்னர் காமெடியனாக மட்டுமே தமிழ் படங்களில் நடித்து வந்தார். பிறகு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து அவர் ஹீரோவாகவே நடித்து வருகிறார்.
அதை தொடர்ந்து, சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு கிக் என்று பெயரிட்டுள்ளார்கள். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் ஆரம்பமானது. தொடர்ந்து ஒரே கட்டமாக சென்னையில் நடந்து வந்த இதன் படப்பிடிப்பு பாங்காங்கில் 15 நாட்கள் நடந்து படப்பிடிப்பு முடிவடைந்தது.
இப்படத்தை ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம், கன்னட பிரபல இயக்குனர் பிரசாந்த்ராஜ் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் கன்னடத்தில் பிரபலமான லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் போன்ற பல படங்களை இயக்கி ஸ்டார் இயக்குனராக உள்ளார். இதில், சந்தானம் ஜோடியாக ‘தாராள பிரபு’ படத்தில் நடித்த தான்யா ஹோப் நடிக்கவிருக்கிறார்.
வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கிக் தான். விளம்பர நிறுவனத்தில் வேலை செய்யும் கதாநாயகனின் ஒவ்வொரு செயலிலும் கிக்காக செய்ய நினைப்பவன். வேறு விளம்பர நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகியுடன் தொழில் முறை போட்டியில் கிக்காக எலியும் பூனையுமாக மோதிக் கொள்கிறார்கள். இவர்களுக்குள் நடக்கும் யுத்தத்தை முழு நீள நகைச்சுவையுடன் ‘சந்தானம்’ பாணியில் டைரக்டர் உருவாக்கி இருக்கிறார். இரண்டு பாடல்களுக்காக 12 வித விதமான செட் அமைத்து அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக படமாக்கி உள்ளார்கள். இது ஒரு சந்தானம் அக்மார்க் திரைப்படம். குடும்பத்துடன் ஜாலியாக கொண்டாடும் விதத்தில் கதை அமைந்துள்ளது.
மேலும், இப்படத்தில் தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, Y.G.மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, முத்துகாளை, ராகிணி திவேதி, ஷகிலா, கிரேன் மனோகர், கிங்காங், கூல் சுரேஷ், சேது, அந்தோணி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.







