முக்கியச் செய்திகள் தமிழகம்

ரயில்கள் மூலம் நிலக்கரி கொண்டு செல்வது அதிகரிப்பு

மின் நிலையங்களுக்கு மின்சாரம் தயாரிப்பதற்காக வடமாநிலங்கள் மற்றும் துறைமுகங்களில் இருந்து ரயில்கள் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்படுவது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின் நிலையங்களுக்கு மின்சாரம் தயாரிப்பதற்காக வடமாநிலங்கள் மற்றும் துறைமுகங்களில் இருந்து நிலக்கரி அனுப்பப்படுகிறது. இவைகள் ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றது இந்த நிலக்கரி போக்குவரத்து கடந்த மே மாதம் மட்டும் 26 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் தற்போது 0.263 மில்லியன் டன்னுக்கும் அதிகமான நிலக்கரி மின் நிலையங்களுக்கு ரயில் மூலம் வந்து சேர்ந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

மேலும் கடந்த ஒன்பது ஆண்டுகளில் தெற்கு ரயில்வே முதல் முறையாக 3.621 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை புரிந்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 49 சதவீதம் அதிகமாகும். இந்த நிதியாண்டில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தெற்கு ரயில்வே 6.857 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு உள்ளது.

கடந்தாண்டு 5.323 மில்லியன் டன் சரக்குகளையே கையாண்டு உள்ள நிலையில், இந்த ஆண்டு 29 சதவீதத்திற்கும் அதிகமான சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. நிலக்கரி, இரும்பு, சிமெண்ட், உணவுப் பொருட்கள், உரம், பெட்ரோலிய பொருட்கள், பெட்டகங்கள் ஆகியவை ரயில் மூலம் கையாளப்பட்ட முக்கிய சரக்குகளாகும். இதில் இந்தாண்டு நிலக்கரி கொண்டு செல்லப்பட்டது அதிகரித்துள்ளதாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’25 ஆண்டுகளுக்குப் பிறகு பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றப்படுகிறது’: அமைச்சர் பொன்முடி

Arivazhagan Chinnasamy

“சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை!” – மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்

Jeba Arul Robinson

கானா நாட்டின் வர்த்தக ஆணையராக பொறுப்பேற்ற மேலூர் தொழிலதிபர்

Web Editor