தமிழ் திரையுலகின் ஜாம்பவானான இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளை (ஜூன் 2) முன்னிட்டு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
தளபதி, நாயகன், மெளன ராகம், புன்னகை மன்னன் என பல ஹிட் படங்களுக்கு இசை அமைப்பாளராக பணிபுரிந்து இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவுள்ளது என்ற அறிவிப்பு அவரது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. “ராஜா – தி மியூசிக்கல்” என்ற பெயரில் தனது இசைப்பயணம் குறித்த திரைப்படம் தயாராக உள்ளது. 
இந்தப் படத்தை 2024ல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டப்பட்டுள்ளது. நடிகர்கள் மற்றும் தொழிற்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







