காவல் துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் சமீப நாட்களில் அதிகரித்துள்ளது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குடியிருப்பைக் காலி செய்யக் கோரி காவலர் மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன், சமீப காலங்களில் காவல் துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதாகவும், இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், உயர் அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ வாகனங்களிலேயே கருப்பு பிலிம் பயன்படுத்துவது, காவல் துறை பெயரை அவர்களது வாகனங்களில் தவறாக பயன்படுத்துவது, தங்கள் வீடுகளில் ஆர்டர்லி என்ற பெயரில் காவல் துறையினரை துஷ்பிரயோகம் செய்வது போன்றவை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உயர் அதிகாரிகள் மீது மக்களிடையே உள்ளது. ஆனால், அரசால் கவனிக்கப்படாமல் இருக்கின்றன.
காவல் துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் செய்ததில் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என கேள்வி எழுப்பியதுடன், அறிக்கை அளிக்கவும் அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை ஜூன் 21ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
-ம.பவித்ரா







