கரூரில் 3-வது முறையாக 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் மே மாதம் 26ஆம் தேதி வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 8 நாட்கள நீடித்தது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜூன் 23ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மூன்றாவது கட்டமாக கரூரில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். கொங்கு மெஸ் மணி வீடு, சக்கி மெஸ் உணவகம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல் சின்ன ஆண்டாங்கோவில் பாரி நகரில உள்ள ராம விலாஸ் நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையில ஈடுபட்டுள்ளனர்.மேலும் அதிபன் கேபிடல்ஸ் என்னும் நிதி நிறுவனத்திலும், கோவை சாலையில் உள்ள குறிஞ்சி பைனான்ஸ் உள்பட 5 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடைபெறும் இடங்களில் துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.






