ஈமு கோழி மோசடி வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை

ஈமு கோழி மோசடி வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 2 கோடியே 47 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஈமு கோழி…

ஈமு கோழி மோசடி வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 2 கோடியே 47 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஈமு கோழி நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக பழனிச்சாமி என்பவர் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், கோகுல்ராஜ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு ஜாமினில் வெளியேயுள்ள யுவராஜ், வாசு, தமிழ்நேசன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

ஈமு மோசடி வழக்கில் தண்டனைப்பெற்ற யுவராஜ்

இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், யுவராஜ் உள்ளிட்ட மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை மற்றும் 2 கோடியே 47 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.