முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுகவிலிருந்து மேலும் 44 பேர் நீக்கம்- ஓ.பி.எஸ் அறிவிப்பு

அதிமுகவில் இரண்டாம் கட்டமாக நீக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 44 பேர் நீக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டமாக நீடித்து கொண்டிருக்கும் நிலையில் ஓபிஎஸ் மற்றும் பழனிசாமி இருவரும் நிர்வாகிகளை நீக்கி அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி உட்பட 22 தலைமைக் கழக நிர்வாகிகளை நீக்குவதாக நேற்று அன்று ஓ.பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்று இரண்டாம் கட்ட நிர்வாகிகள் நீக்க பட்டியலை ஓபிஎஸ் வெளியிட்டார். குறிப்பாக, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, பி. வீ. ரமணா, பெஞ்சமின், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே. சி. கருப்பணன், காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உட்பட 44 பேரை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ள ஓபிஎஸ், இவர்களுடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது எனவும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ், கட்சி விரோத செயலில் ஈடுபட்ட காரணத்தினால் அனைவரும் நீக்கப்பட்டதாகவும் இதுவரை நீக்கப்பட்டவர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துள்ளதாகவும் கூறினார். மேலும், பொன்னையன் மட்டுமில்லாமல் ஜெயக்குமார் போன்ற மூத்த நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ளதால் விரைவில் பல மாற்றங்கள் நடக்கும் என தெரிவித்த கோவை செல்வராஜ் , மக்களவை உறுப்பினர் தருமர் ஓபிஎஸ் ஆதரவாக தான் உள்ளார். பழனிசாமி அணிக்கு செல்லவில்லை எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 2023: தேர்ச்சி விகிதம் – அரசு Vs தனியார் பள்ளிகள்

Web Editor

அம்பு எய்வதில் புதிய உலக சாதனை படைத்த 8 வயது சிறுமி!

Web Editor

தாத்தா விழுந்து விபத்துக்குள்ளான சாலையை சரி செய்த பேரன்!

Jayasheeba