சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வங்கியில் நகைக்கடை நிறுவனத்தில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் என்பது புதிதல்ல. இதுவரை தமிழ்நாட்டில் நடந்துள்ள வங்கி கொள்ளைகள் குறித்த சம்பவங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் அடுத்தடுத்து 2 வங்கிகளில் பணம் கொள்ளையடிக்கப்படும் சம்பவம் நடந்தது. பெருங்குடி பேங்க் ஆப் பரோடா
வங்கியிலும் கீழ் கட்டளை இந்தியன் ஓவர் சீஸ் வங்கியிலும் துப்பாக்கி முனையில் கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில்
ஈடுப்பட்ட 5 கொள்ளையர்கள் பிப்ரவரி மாதம் காவல்துறை என்கவுண்டரில் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 2016ம் ஆண்டு சேலத்தில் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட 5.78 கோடி ரிசர்வ் வங்கியின் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. திரைப்பட பாணியில் ரயிலின்
மேற்கூரையை துளையிட்டு வடமாநில கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றினர். இந்த கொள்ளையர்களை கண்டுபிடிக்கவே சிபிசிஐடி போலீசாருக்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது.
கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை அடையாறு இந்திரா நகரில் இந்தியன் வங்கிக்குள் நுழைந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி 6 லட்சம் ரூபாய் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பீஹார் இளைஞர் இரண்டு பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கடந்த 2018 மே மாதம் திருவள்ளூரில் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 6 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. சுவரில் துளையிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய வங்கி ஊழியர் உட்பட 3 பேரை கொள்ளை நடந்து 12 மணி
நேரத்தில் காவல்துறையினர் துரிதமாக கைது செய்தனர்.
அதே ஆண்டில் மே மாதம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் துப்பாக்கி முனையில் 9 லட்சம் ரூபாய் பணம் தங்க நகைகள்
கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையில் வாங்கி ஊழியர் உட்பட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் நிகழ்ந்தது. கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியின் சுவரில் துளையிட்டு 450 சவரன் தங்க நகைகள் 19 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையில் மறைந்த திருவாரூர் முருகன் உட்பட அவரது கூட்டாளிகளை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருப்பூர் பல்லடம் அருகில் பாரத ஸ்டேட் வங்கியில் ஜன்னலை உடைத்து வங்கியில் இருந்த 600 சவரன் தங்க நகைகள்,
ரூபாய் 18 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. கொள்ளையனை காவல்துறையினர் டெல்லி சென்று கைது செய்தனர். தமிழ்நாட்டில் நடந்துள்ள சில வங்கி கொள்ளை சம்பவங்கள் இவை. ஆனால் இது போன்ற கொள்ளை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டது அதே வங்கிகளில் பணிபுரிந்த ஊழியர்களே என்பது அதிர்ச்சிக்குரிய ஒன்று.
– சுப்பிரமணியன்