நிதியமைச்சர் காரில் காலணி வீசிய சம்பவம்; சரவணணை கைது செய்ய பாஜக மனு

நிதி அமைச்சர் காரில் காலணி வீசிய சம்பவம் தொடர்பாக டாக்டர் சரவணனை கைது செய்ய கோரி பாஜகவினர் மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர். கடந்த 13ம் தேதி மதுரை விமான நிலையத்தில்…

நிதி அமைச்சர் காரில் காலணி வீசிய சம்பவம் தொடர்பாக டாக்டர் சரவணனை கைது செய்ய கோரி பாஜகவினர் மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

கடந்த 13ம் தேதி மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் நிதி அமைச்சருக்கும், பாஜகவினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து வந்த போது அவரது காரை முற்றுகையிட்ட பாஜகவினர் அவரது காரில் காலணியை வீசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்ட தலைவராக இருந்த டாக்டர் சரவணன் கட்சியிலிருந்து விலகினார்.

இந்நிலையில் காலணி வீசிய சம்பவத்திற்கு தூண்டுதலாக இருந்ததாக பாஜக முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணனை கைது கோரி தற்போதையை பாஜக மாவட்ட தலைவர் சுசீந்திரன் தலைமையில் பாஜகவினர் 50-க்கும் மேற்பட்டோர் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமாரிடம் மனு அளித்தனர்.


ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கூடியிருந்தபோது நிதி அமைச்சர் இவர்களை யார் அனுமதித்தது, இங்கு வர என்ன தகுதி உள்ளது என கூறியதால் பாஜகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் அதனை உடனடியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கூறியபோது கட்சியினர் மாண்புடன் நடந்து கொள்ள வலியுறுத்தியதாகவும் ஆனால டாக்டர் சரவணன் மாண்பை மீறி நிதி அமைச்சரின் காரின் காலணியை வீசும் சம்பவத்திற்கு தூண்டுதலாக இருந்ததாகவும் எனவே அவரை கைது செய்ய வேண்டும் எனவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.