உத்தரபிரதேச மாநிலத்தில் முககவசம் அணியாவிட்டால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிரடியாக அறிவித்துள்ளார்.
மக்கள் தொகை அதிகமாக உள்ள மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அங்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகள் மே 15ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முக கவசம் அணியாமல் விட்டால் முதல் முறை ஆயிரம் ரூபாயும், மறுமுறை 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.







