58 பயணிகளுடன் சென்ற சொகுசு பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. 18 பயணிகள் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தருமபுரி சோகத்தூர் அருகே சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், லாரி
பார்க்கிங் பகுதிக்கு அருகே கோவையில் இருந்து பெங்களூருவிற்கு சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து அதிகாலை 5 மணிக்கு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பயணிகள் காயம் அடைந்தனர்.
இதில் இருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தனர். விபத்துகுள்ளான பயணிகளை ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு்ள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த விசாரணையில், வாகனங்கள் மெதுவாக கடந்து செல்ல சாலையி்ல் வைக்கப்பட்டிருந்த பேரி கார்டினை கவனிக்காமல் அதன் மீது ஆம்னி பேருந்து மோதியதால் விபத்து ஏற்பட்டிருக்கிறது என காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து தருமபுரி நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நல்வாய்ப்பாக உயிர்ச்சேதமோ, பெரிய அளவிலான பாதிப்புகளோ விபத்தில் ஏற்படவில்லை.







