முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கிடையேயான வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வு குறைவு

தமிழகத்தில் மாநில உள்நாட்டு உற்பத்தியில் மாவட்டங்களுக்கிடையேயான வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வு குறைவாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்டங்களில் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய மாநில திட்டக்குழுவால் ‘தமிழகத்தில் பிராந்திய வளர்ச்சி முறை’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியில் பிராந்திய ஏற்றத்தாழ்வு குறைவாகவே உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மாநில திட்டக்குழுவின் அறிக்கையின் படி, தமிழ்நாட்டின் மாவட்டங்களின் மொத்த மாவட்ட உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிடிபி) பகுப்பாய்வு சுமார் 30 ஆண்டு காலமாக தமிழகத்தில் இடஞ்சார்ந்த மற்றும் துறைசார் வளர்ச்சியின் விநியோகம் அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டுகிறது. அதிக பொருளாதார வளர்ச்சி உள்ள மாவட்டங்கள் அதிக மக்கள் தொகையை கொண்டுள்ளன. எனவே, மக்கள்தொகை மாவட்டங்களுக்கு இடையே மாறுபடும்.

சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ஈரோடு, கோவை ஆகியவை ஜிடிடிபி அதிகம் உள்ள மாவட்டங்கள். இதில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி போன்ற மாவட்டங்கள் ஜிடிடிபி வளர்ச்சி அதிகளவு காணப்படுகிறது.

கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்கள் ஜிடிடிபி வளர்ச்சியில் நடுத்தர அளவிற்கு மேல் உள்ள மாவட்டங்களாக காணப்படுகிறது.

ஜிடிடிபி வளர்ச்சியில் நடுத்தர அளவில் குறைந்த மாவட்டங்களாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

குறைந்த ஜிடிடிபி வளர்ச்சியில் தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் அடங்கும். இந்த வளர்ச்சியானது தனிநபர் வருமானம், மாநில உள்நாட்டு உற்பத்தி, பொருளாதார அளவு ஆகியவற்றை வைத்து ஆராய்ந்து மதிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து பிராந்தியங்களுக்கும் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், வளர்ச்சியில் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய பொருளாதாரக் கொள்கைகளை வழிநடத்த வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்தின் உட்பொருளை புரிந்து கொள்ள வேண்டும்’ – தமிழிசை செளந்தரராஜன்

G SaravanaKumar

ஜனவரி 31 வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு

EZHILARASAN D

சீனா அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி சந்திப்பு

Web Editor