தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2,114 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.   தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தும், குறைந்தும் வந்தது.…

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தும், குறைந்தும் வந்தது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் தொற்று பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஒரே நாளில் 2 ஆயிரத்து 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 35,24,258ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை. தமிழ்நாடு முழுவதும் தொற்று பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 30ஆக உள்ளது. ஒரே நாளில் 2,243 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதால், குணமடைந்ததோர் எண்ணிக்கை 34,69,526-ஆக அதிகரித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 32,495 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 6 கோடியே 65 லட்சத்து 91 ஆயிரத்து 763 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. அதிகப்பட்சமாக சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 5,781 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,366 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.