விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் மூலம் விஜய் நேரடியாக தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், தற்போது மீண்டும் ஹைதராபாத்தில் நான்காம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் குடும்ப கதையம்சம் கொண்ட படமாக உருவாகிவரும் வாரிசு திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப படமாக உருவாகி வருவதால், ரசிகர்கள் இடையே, பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் மாறுப்பட்ட விஜயை இந்த படத்தில் பார்க்கலாம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளது ரசிகர்களை மேலும் எதிர்ப்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே, வாரிசு திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநாடு, டான் உள்ளிட்ட வெற்றி படங்களின் வரிசையில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு விஜயுடன் கைகோர்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எஸ் ஜே சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு இந்த தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
– இரா.நம்பிராஜன்