மகாவீர் ஜெயந்தியையொட்டி புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ஜெயின் கோவிலில்
சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, நடைபெற்ற வண்ணமயமான தேர்திருவிழாவில் 500 க்கும் மேற்பட்ட ஜெயின் சமூகத்தினர் கலந்துகொண்டு நகரின் முக்கிய வீதிகள்
வழியாக ஊர்வலமாக சென்றனர்.
மகாவீர் ஜெயந்தி விழா நாடுமுழுவதும் வெகு விம்சையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ஜெயின் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் மகாவீர் சிலையுடன் தேர் பவனி நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் புதுச்சேரியில் வாழும் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பஜனை பாடல்களை பாடியபடியும் பல்வேறு வாத்தியங்களை இசைத்தபடியும் ஊர்வலமாக சென்றனர்.
அண்ணா சாலையில் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும்
கோவிலை வந்தடைந்தது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரியில்
மதுபானக்கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
—ரெ.வீரம்மாதேவி







