முக்கியச் செய்திகள் தமிழகம்

பிங்க் நிறமாக மாறுகிறது பெண்கள் இலவச பேருந்து

சேப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் முதற்கட்டமாக 60 பிங்க் நிற பேருந்துகளை நாளை துவங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் முதல் கையொப்பமாக பெண்களுக்கான இலவச பேருந்து அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதே நேரத்தில் சென்னையில் ஓடக்கூடிய அனைத்து மாநகர பேருந்துகளும் ஒரே வண்ணத்தில் இருப்பதனால் எது இலவச பேருந்து எது கட்டண பேருந்து என்பதை கண்டறிவதில் சில இடங்களில் வயதானவர்களுக்கு குழப்பம் நீடிக்கிறது. இதனால் நடத்துனருடன் வாக்குவாதம் ஏற்படும் சம்பவங்களும் நடைபெறுகிறது.

இதனை தவிர்க்கும் பொருட்டு தூரத்தில் வரும்போது அது கட்டணப் பேருந்தா இலவச பேருந்தா என்பதை அறிந்து கொள்ளும் வகையில் மகளிர் இலவசமாக பயணிக்கும் பேருந்துகளை பிங்க் நிறத்தில் வண்ணம் பூசி முதற்கட்டமாக 60 பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அவற்றை நாளை சேப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். படிப்படியாக அனைத்து இலவச பேருந்துகளுக்கும் இந்த நிறம் பூசுவது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிங்க் நிறத்தில் பெண்கள் கட்டணம் இல்லாமலும், ஆண்கள் வழக்கம் போல கட்டணம் செலுத்தியும் பயணிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தடுப்பூசிக்கு கட்டுப்படாத புதிய வகை வைரஸ் – அமைச்சர் தகவல்

G SaravanaKumar

கோலியின் மகளுக்கு அச்சுறுத்தல்; விளக்கம் கேட்டு நோட்டீஸ்

Halley Karthik

வங்கதேசத்திற்கு இலவசமாக 12 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்கிய இந்தியா

Gayathri Venkatesan