முக்கியச் செய்திகள் கொரோனா

1,141 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி!

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 1,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் படிப்படியாக கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி, மீண்டும் தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது. இருந்தாலும், மக்கள் மத்தியில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாட்டின் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அடங்கிய விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுவருகிறது. அதன்படி, இன்று ஒரே நாளில் 1,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 10,598 ஆக உள்ளது.

அண்மைச் செய்தி: ‘‘போதைப்பொருட்கள் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும்’ – எம்.எல்.ஏ.க்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்’

கொரோனா தொற்றால் 0 உயிரிழப்பும், 1,530 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். சென்னையில் 247 பேருக்கும், செங்கல்பட்டில் 98 பேருக்கும், கோவையில், 130 பேருக்கும், திருச்சியில் 27 பேருக்கும், திருவள்ளூரில் 37 பேருக்கும் என ஒட்டுமொத்தமாக இன்று 1,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி; நெசவாளர்கள் கண்ணீர்

Halley Karthik

கேஸ் சிலிண்டர் விலையுயர்வு; ராகுல் காந்தி கண்டனம்

Halley Karthik

அச்சுறுத்தும் பொருளாதாரம் – அச்சத்தில் பாகிஸ்தான்

Halley Karthik