முக்கியச் செய்திகள் இந்தியா

அப்பளத்துக்காக சண்டை; கலவர பூமியாக மாறிய கல்யாண வீடு

அப்பளம் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த மாப்பிள்ளையின் நண்பர்கள், பெண் வீட்டாரிடம் மோதலில் ஈடுபட்டதால் திருமண மண்டபமே களேபரம் ஆன சம்பவம் கேரள மாநிலத்தில் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், ஆலப்புழா அருகே ஹரிப்பாடம் முட்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு அதே பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் திருமண எற்பாடுகள் நடந்துள்ளது. இதில் மாப்பிள்ளையின் நெருங்கிய நண்பர்கள் பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திருமண மண்டபத்தில் விருந்து ஏற்பாடுகள் தொடங்கி, விருந்து பரிமாரப்பட்டது. அப்போது மாப்பிள்ளையின் நண்பர்களுக்கு, உணவில் அப்பளம் வைக்கவில்லை என கூறப்படுகிறது. தங்களுக்கு அப்பளம் வைக்கவில்லை என, உணவு பரிமாறியவர்களிடம், மாப்பிள்ளையின் நண்பர்கள் கேட்டுள்ளனர். இதனால் உணவு பரிமாறியவர்களுக்கும் உணவு அருந்த வந்தவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மாப்பிள்ளையின் நண்பர்களுக்கு அப்பளம் இல்லாயா என, மாப்பிள்ளையின் உறவினர்களும் ஒன்று சேர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாகி, அந்த இடமே களேபரமானது.

மாப்பிள்ளையின் நண்பர் ஒருவர், மேஜை நாற்காலிகளை அடித்து உடைத்துள்ளார். மண்டப்பத்தாரும், பெண் வீட்டாரும் தட்டி கேட்டதால், இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இந்த மோதலில், மண்டப ஊழியர்கள் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். மேதலால் மண்டபத்தில் இருந்தவர்கள் சிதறியடித்து ஓடினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், திருமண மண்டபத்திற்கு விரைந்து வந்து, மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை விரட்டி அடித்தனர்.

இந்த சம்பவத்தை திருமணத்திற்கு வந்த சிலர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த மோதல் காட்சி சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருமண மண்டபத்தில் வழங்கப்பட்ட உணவில், அப்பளம் வைக்கப்படாததால் மாப்பிளையின் நண்பர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram