வர்த்தக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு

வர்த்தகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 96 ரூபாய் திடீரென  குறைக்கப்பட்டுள்ளது.  உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை…

வர்த்தகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 96 ரூபாய் திடீரென  குறைக்கப்பட்டுள்ளது. 

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை பலமடங்கு உயர்ந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியதை அடுத்து அவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் விலையும் குறையத் தொடங்கியுள்ளது.

வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. 

அதன்படி, வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ .96 ஆக குறைந்துள்ளது. இதனால், அதன் விலை ரூ. 2,141இல் இருந்து ரூ. 2,045ஆக குறைந்தது. கடந்த மே 19ஆம் தேதிக்குப் பின்னர் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 5வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தும் சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.