உணவகம் ஒன்றில் பல்லி விழுந்த சாம்பார் உட்கொண்ட 8 பேர் மதுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில் அஜய்
என்ற பெயரில் உணவகம் நடத்தி வருபவர் வெள்ளைசாமி. பிரபல
தனியார் மருத்துவமனை மற்றும் பேருந்து நிறுத்தம் அருகில் உணவகம் அமைந்திருக்கிறது. இதனால் காலை, மதியம் மற்றும் இரவு என
மூன்று வேளைகளிலும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக
காணப்படும்.
இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் எட்டு பேர் காலை உணவு அருந்தி கொண்டிருந்த போது , சாம்பார் ஒன்றில் பல்லி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து, பல்லி கிடந்த உணவை உட்கொண்ட எட்டு பேரும், அடுத்தடுத்து திடீரென வாந்தி எடுத்ததுடன் மயக்கம் அடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, உடனடியாக அவர்கள் அனைவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், அவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து , சாய்பாபா காலனி
காவல் நிலைய போலீசார் உணவக உரிமையாளரான வெள்ளை சாமியை , காவல்
நிலையத்திற்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
— கு.பாலமுருகன்







