அமெரிக்காவில் இரண்டு கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள சாண்-டியாகோ உயிரியல் பூங்காவில் உள்ள 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2 குரங்குகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதேநேரம், இருமல் பாதிப்பை தவிர 2 குரங்குகளின் உடல்நிலையும் நன்றாக இருப்பதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனினும், குரங்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அறிகுறி இல்லாத கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பூங்கா ஊழியரிடம் இருந்து, கொரில்லா குரங்குகளுக்கு தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.







