உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்குகள் நேரலை

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக உச்சநீதிமன்ற வழக்குகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றோடு ஓய்வு பெறுகிறார். அதனைமுன்னிட்டு அவரது அமர்வு முன் வரும் வழக்குகள் அனைத்தும் நேரலை செய்யப்படுகின்றன. கடந்த…

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக உச்சநீதிமன்ற வழக்குகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றோடு ஓய்வு பெறுகிறார். அதனைமுன்னிட்டு அவரது அமர்வு முன் வரும் வழக்குகள் அனைத்தும் நேரலை செய்யப்படுகின்றன.

கடந்த 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் நடைமுறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இதனையடுத்து வழக்குகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் வகையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு வரும் வழக்குகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

உச்சநீதிமன்றத்தின் கணினி செல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ,  ’தலைமை நீதிபதியின் பணியின் கடைசி நாளான இன்று அவருக்கு தகுந்த மரியாதை செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 26, 2022 அதாவது இன்று காலை 10:30 மணி முதல் NIC’ வெப்காஸ்ட் போர்ட்டல் மூலம் இந்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்” ,என்று கூறப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று மட்டும்தானா எதிர்காலத்தில் தினமும் தொடருமா என்பது குறித்த எந்த விபரமும் வெளியிடப்படவில்லை.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.